Categories
உலக செய்திகள்

அங்க இருந்துதான் பரவியிருக்கு… “எங்கிட்ட ஆதாரம் இருக்கு”… ஆனா சொல்ல மாட்டேன்… சிக்கியதா சீனா?

கொரோனா வைரஸ் சீனாவின் வைரலாஜி நிறுவனத்திலிருந்து பரவி இருக்கலாம் எனவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்..

உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் உருவாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில தகவல்கள் பரவியது.

ஆனால் அப்படி எல்லாம் கிடையாது என சீனா அதை திட்டவட்டமாக மறுத்தது. அதேநேரம் கொரோனா வைரஸ் வூஹானில் இருக்கும் விலங்குகளை விற்பனை செய்யும் சந்தையிலிருந்து தான் தோன்றியதாகவும், விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவியதாகவும் பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் இறந்துவிட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். சீனா ஒழுங்காக ஆரம்பித்திலேயே எச்சரித்திருந்தால் பல பேர் இறந்திருக்க மாட்டார்கள். உலகம் மிகப்பெரிய மோசமான இழப்பை சந்தித்து இருக்காது என்று சீனாவை திட்டி வருகிறார்.

இதனிடையே கொரோனா வைரஸை சீனா வூஹானில் உள்ள வைரலாஜி நிறுவனத்தில் உருவாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் அதிபர் டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வியாழக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வைராலஜி நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என்று தான் அதிகமாக நம்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள், உங்களுக்கு அதிக நம்பிக்கை அளிக்கும் அளவுக்கு ஆதாரத்தை கண்டீர்களா என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ட்ரம் ஆமாம் என்னிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் அதை இப்போது உங்களிடம் சொல்ல முடியாது. அதை உங்களுக்குச் சொல்ல எனக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசின் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனம் முற்றிலும் நிராகரித்துள்ளது. மேலும் தங்களை பற்றி அமெரிக்க அதிகாரிகள் குறைவான மதிப்பிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளுமே தொடர்ந்து மாறி மாறி புகார் கொடுத்து வருவது சீனா – அமெரிக்கா இடையே பெரும் பிளவு காரணமாக இருக்கிறது.

Categories

Tech |