அமெரிக்கா கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்க்கு நேற்று பதிலளித்த அமெரிக்க அதிபர் , இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். டிரம்ப்பின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக அமெரிக்காவில் கூட வெளிநாட்டு உறவுகளை டிரம்ப் சீர்குலைக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.
டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியாவில் அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த மாதிரியான மிரட்டலுக்கு நாம் அடி பணியக் கூடாது என்று சொல்லி இந்த நிலையில் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மனிதாபிமானம் அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.