அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவகாரம் நடைபெற்றது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் நடைபெற்ற இந்த விவாதத்தில் ட்ரம்ப்பும், ஜோ பிடனும் அனல் தெறிக்க விவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜோபிடனை ஊக்க மருந்து சோதனை உட்படுத்த வேண்டும் என ட்ரம்ப் கூறிய நிலையில், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவது இல்லை என ஜோ பிடன் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அக்டோபர் பதினைந்தாம் தேதி புளோரிடாா மாகாணம் மியாமியிலும், அக்டோபர் 22ம் தேதி மாகாணம் மாஸ்வில்லிலும் ட்ரம்ப் ஜோ பிடன் விவாதம் நடத்துகிறார்கள்.