அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் சிவப்பு கம்பள மரியாதையுடன் வெளியேறியுள்ளார்.
கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று பைடனுக்கு பதவி ஏற்பு விழா நடந்தது. இதையடுத்து பதவியேற்பு விழாவில் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் ட்ரம்ப் அதிபர் பைடனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு டொனால்ட் ட்ரம்ப் வெளியேறினார். 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் அவர் வழி அனுப்பி வைக்கப்பட்டார். என் ஆட்சியில் பெரிய அளவில் வரிகளை குறைத்தேன். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் ஜோ பைடன் ஆட்சியில் வரை உயரும் என்றும் கூறினார்.