Categories
உலக செய்திகள்

லைசால்… பிளீச்சிங் பவுடர்… ! ”ட்ரம்ப் சொல்லிட்டாரு” விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள் …!!

டிரம்ப் உடலிலிருக்கும் தொற்றை அழிக்க கிருமிநாசினிகளை உடலில் செலுத்தலாம் என கூறிய கருத்தை நியூயார்க் மக்கள்  பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. தொற்றை தடுப்பதற்காக பெரிய போராட்டமே நடந்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் கூறிய கருத்து ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினிகள் வைரஸை அழிக்கும் என்றால் அதனை ஏன் பாதித்தவர்களின் உடலில் செலுத்தக் கூடாது என்ற மிக அற்புதமான யோசனையை அதிபர் வெளிப்படுத்தினார். டிரம்பின் இந்த கருத்தினால் அதிர்ச்சியடைந்த ஊடகங்கள் உலக அளவில் அவரது கருத்தை ட்ரெண்டாக்கினர்.

பின்னர் டிரம்ப் நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன் அதை சீரியசாக எடுத்து விட்டீர்கள் என்று பின்வாங்கினார். ஆனால் டிரம்ப் கிண்டலாக கூறியதை புரிந்துகொள்ளாத நியூயார்க் நகர வாசிகள் 30 பேர் அவர் கருத்தை கூறிய 18 மணி நேரத்திற்குள் யோசனையை பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். கிருமி நாசினிகளை தங்கள் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தி கொரோனா தொற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது வருந்ததக்க விவகாரமாக மாறியுள்ளது.

9 பேர் லைசாலையும், 11 பேர் வீடு சுத்தம் செய்யும் திரவங்களையும், 10 பேர் பிளீச்சிங் பவுடரையும் உடலுக்குள் செலுத்தி இருப்பதாக அமெரிக்க விஷ தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தொற்றினால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொற்றின் தாக்கம் உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காவை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை மேற்கண்ட விவகாரமே காட்டுகின்றது.

Categories

Tech |