Categories
உலக செய்திகள்

அமெரிக்கா காவல்துறையில் சீர்திருத்தம்… இன்று கையெழுத்திடும் அதிபர் ட்ரம்ப் …!!

காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான ஆணையில் இன்று கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் காவத்துறையினரால்  கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. ஜார்ஜ் கொலைக்கு நீதிகேட்டு, நிறவெறிக்கு எதிராக முழக்கமிட்டும்,  ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமையை உறுதிப்படுத்தவும்  அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அட்லாண்டாவில் ப்ரூக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை வன்முறையை தடுக்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான ஆணையில் இன்று தான் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் “காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டுவரும் ஆணையில் நாளை(ஜூன் 16) கையெழுத்து விட உள்ளேன். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பேன். நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது” என கூறினார்.

Categories

Tech |