அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட போவதாக கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மா பகுதியில் நேற்று பேரணி நடந்திருக்கிறது. அதில், முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாவது, இரண்டு தடவை நான் அதிபர் தேர்தலில் களமிறங்கினேன்.
இரண்டு தடவையும் வெற்றி பெற்றேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை சிறப்பாக செயல்பட்டேன். அதனை மீண்டும் நாம் செய்ய வேண்டி வரும். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதை பார்ப்பதற்கு யாராவது விரும்புகிறார்களா? என்று கேட்டுள்ளார்.