அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாநிலமாக இருக்கும் டெக்சாஸை அதிபர் டிரம்ப் கைப்பற்றியுள்ளதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகியுள்ளது.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 204 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வருக்கின்றார்.
தொடர்ச்சியாக எந்தெந்த மாநிலங்கள் எல்லாம் முடிவை தீர்மானிக்கின்றதோ அந்தந்த மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில் டிரம்ப் முன்னிலையில் இருபதால் தேர்தல் முடிவு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 38 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்ஸாஸ் மாநிலத்தில் 52.1% வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெற்றியை தீர்மானிக்கும் புளோரிடா மாநிலத்திலும் உள்ள 29தேர்தல் சபை இடங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.