அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் ட்ரம்பின் பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா மாநில முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட வில்லை. இதனிடையே தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 164 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். நெவாடா மாநிலத்தில் மொத்தமுள்ள 6 வாக்கையும் அவர் பெற்றால் மட்டுமே வெறி பெற முடியும்.
இதனிடையே எண்ணிக்கையில் மோசடி நடப்பதாகவும், தனது மேற்பார்வையில் கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனவும் டிரம்ப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படுவதை எதிர் வேட்பாளர் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றியை அறிவிக்க முடியும் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது. அதன்படி தோல்வியடைந்து ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு தொடர உரிமை உண்டு. இதுவரை தனக்கு எதிராக வரும் முடிவுகளை டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.