இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்துவந்த எச்1பி விசாவுக்கு அதிபர் தடைவிதித்தது அதிருப்தியை கொடுப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டங்கள் சில நடந்தேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்கவாழ் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியது. அதில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளைக் குறைத்து உள்நாட்டு மக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தது.
இதனால் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் கடுமையான விதிமுறைகளை விதித்தது அதன்படி அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வேலை செய்ய கொடுக்கப்பட்ட எச்1பி விசா இந்த வருடத்தின் இறுதிவரை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்தியா உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் அவர் , “அமெரிக்காவின் பொருளாதாரம் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கு வெளிநாட்டவர்களின் பங்களிப்பே காரணம். அப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தடுக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளார். எனது அதிருப்தியை இதற்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.என் ஆதரவு எப்போதும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொடரும்” என்று பதிவிட்டிருந்தார் .