சீனாவும் இந்தியாவும் மிகவும் கடினமான நிலையில் இருந்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்
சீனாவின் எல்லைப்பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்தி ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் சீனாவிடமிருந்து வெளிவரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரண்டு நாடுகளிடையே இருந்த உறவில் விரிசல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “இந்தியாவும் சீனாவும் மிகவும் கடினமான சூழலில் இருக்கின்றன. இரண்டு நாட்டுடனும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். மிகப் பெரிய பிரச்சனையை அவர்கள் கொண்டுள்ளனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு உதவ எங்களால் ஆன முயற்சியை செய்து வருகின்றோம்” எனக் கூறினார்