Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்க… ”திரும்ப, திரும்ப கோபம் வருது”…. ட்ரம்ப் ட்விட் …!!

கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தால் நான் சீனா மீது அதிகம் கோபப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை மிஞ்சியுள்ளது. அமெரிக்க புற்றுநோய் நிபுணர் அந்தோணி இதுகுறித்து கூறுகையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்றும் நாம் இப்போது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் “அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொற்று நோய் உலகம் முழுவதும் அதன் அசிங்கமான முகத்தை பரப்புவதை பார்க்கும் போதும் அது அமெரிக்காவிற்கு இளைத்திருக்கும் பெரும் சேதம் உட்பட அனைத்திற்கும் சேர்த்து நான் சீனா மீது அதிக அளவு கோபப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்

Categories

Tech |