Categories
உலக செய்திகள்

ட்ரம்புடன் பேச்சுவார்த்தை… டிக் டாக்கை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்….?

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவிற்கு சொந்தமாக இருக்கின்ற பிரபல டிக் டாக் நிறுவனத்தினை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். உலக அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ள குறு வீடியோ செயலியான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் தடைவிதிக்க போகும் அபாயத்தை தொடர்ந்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் சிந்திக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது பற்றிய பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது.

ஆனாலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் மிகவும் உறுதியாக இருந்த காரணத்தால், பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசியுள்ளார்.அந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அதுதொடர்பாக மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் ” அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |