Categories
உலக செய்திகள்

‘உனக்கு நான் இருக்கேன் நண்பா’ – கொரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!

கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியுடன் போரிட்டு வருகிறது. இப்போரில் மக்களைக் காப்பாற்றும் சிப்பாய்களான களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த எதிரியை ஒரே அடியாக அழிக்கும் ஆயுதமான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியிருக்கிறது. இதனால், சில நாடுகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், வென்டிலேட்டர்களை இனாமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் உள்ள நண்பர்களுக்காக அமெரிக்கா வென்டிலேட்டர்களை இலவசமாக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். பெருந்தொற்று காலத்தில் நாங்கள் இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் துணை நிற்கிறோம். தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒன்றாக இணைந்து விரைவில் வெல்வோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, அதிபர் ட்ரம்ப்பின் வேண்டுகோளின் பேரில், இந்தியாவிலிருந்து 50 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |