முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியதிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் CNN செய்தி ஒன்றை வெளியிட்டது. இதற்கிடையில் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல மனநிலையில் தான் இருந்தார். ஆனால் தற்போது டிரம்புடன் நேரத்தை செலவிடுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் மீது மெலனியா கோபம் அடைவதற்கு காரணம் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த பின்பும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேராமல் அடம் பிடித்தது மெலனியாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் மெலனியா சமூக ஊடகத்தில் தனது கணக்கில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
இந்த செயலானது மெலனியாவிற்கும் டிரம்பிற்கும் இடையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது. இந்நிலையில் மெலனியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் வெள்ளை மாளிகையின் பிரியாவிடை பதிவை தவிர மற்ற அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் டிரம்ப்- மெலனியா தம்பதியர் இடையே நிச்சயம் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று கருத்துக்கள் வெளியாகி வருகிறது.