2 மணி நேரத்திற்குள் 123 பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
முக்கிய சமூக வலைத்தளமாக இருக்கும் டுவிட்டரை அதிகம் உபயோகபடுத்தும் உலக தலைவர்களில் அமெரிகாவின் குடியரசுத்தலைவர் டிரம்ப் முக்கியமானவர். தன்னுடைய ஆட்சியில் அரசு எடுக்கும் புதிய திட்டங்கள், தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் சில முக்கியமான முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார்.
இந்த நிலையில் 2 மணி நேரத்திற்குள் நூற்று இருபத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார். என்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், டிரம்ப் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஒரு ட்விட்டர் பதிவில் டிரம்ப், என்னை பதவியிலிருந்து நீக்குவது நியாயமான செயல் அல்ல என்றும், தன எந்தவித தவறும் செய்யவில்லை எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு எதிராக செய்திகளை பரப்பும் ஊடகங்களின் நம்பகத் தன்மைகளை சாடிய டிரம்ப், அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் அனைவரையும் இனி பதவியில் இருந்து நீக்கம் செய்வார்கள் என்று ஜனநாயக கட்சியினரை விமர்சித்துள்ளார்.