Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் பயந்த மாதிரியே ஆகிட்டு…. புரட்டி போட்ட முடிவுகள்…. அதிபராகும் ஜோ பைடன் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார்.

பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 மாகாணங்களிலும் டிரம்ப்புதான் முன்னிலையில் வகிக்கின்றார். இந்த மாநிலங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க போகின்ற மாநிலங்கள். இந்த 3 மாநிலங்களில் மட்டும் 46தேர்தல் சபை வாக்குகள் உள்ளன.இந்த மூன்று மாகாணங்களிலும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளதை அடுத்து டிரம்ப் இப்படியான கருத்தை தெரிவித்தார்.

மத்திய நேர நிலவரப்படி விஸ்கான்சின்னில் 51.3%, பென்சில்வேனியா 55.7%, மிச்சிகன் 53.3% வாக்குகளும் பெற்று அதிபர் டிரம்ப்பே முன்னிலையில் இருந்தாலும் இங்குள்ள தபால் வாக்குகளை எண்ணும் போது  ஜோ பைடனுக்கு  அதிகமாக சென்றுவிடும், ஜோ பைடன் வெற்றி பெற்று விடுவார் என்று ஒரு காரணத்தினால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என அங்கிருந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதனால் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் ஜோ பைடன் 238 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று இருந்தனர்.தற்போது எதிர்பார்த்த மாதிரியே விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய இரண்டு மாநிலத்திலும் ஜோ பைடன் முன்னிலை வகுக்கின்றார். இதனால் அவர் அதிபர் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு மாகாணத்திலும் 26வாக்குகள் உள்ளன.அதே போல டிரம்ப் சார்ஜியா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, அலெக்ஸா ஆகிய நான்கு மாகாணங்களில் முன்னிலையில் வருகின்றார்.

Categories

Tech |