Categories
தேசிய செய்திகள்

அது பொய்…. இதான் உண்மை…. பள்ளி திறக்கும் தேதி…? மத்திய அரசு ட்விட்….!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான பொய்யான செய்தி பற்றிய விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை தளர்வுகளுடன்  ஆகஸ்டு 31 வரை நீட்டிப்பு செய்து அந்தந்த மாநில முதல்வர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும், சமீபத்தில் கூட நாடு முழுவதும் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை  திறக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இந்த தகவல்கள் உண்மை இல்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. PIB fact check என்ற மத்திய அரசின் சமூக வலைதளப் பக்கத்தில், இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் என்று கூறி ஃபேக் நியூஸ் என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளது. 

Categories

Tech |