Categories
லைப் ஸ்டைல்

இந்த மூணு விஷயத்த ட்ரை பண்ணுங்க… வெய்ட் குறைக்க யூஸ் பண்ணுங்க…

உடல் பருமனை குறைப்பது என்பது, எடை அதிகமாக இருப்பவருக்கு சிம்ம சொப்பணமாக இருக்கும்.

உடல் பருமனை குறைப்பது என்பது, எடை அதிகமாக இருப்பவருக்கு சிம்ம சொப்பணமாக இருக்கும். என்னதான் தினம் தினம் உடற்பயிற்சி செய்து வந்தாலும் சில சாதாரண மாற்றங்களை செய்யாமல் எடை குறைப்பது என்பது சாத்தியம் இல்லாமல் போகும். ஒரு ஜிம்மில் சேர்ந்தால் மட்டும், எடையைக் குறைத்துவிடலாம் என்று நினைத்து விடக் கூடாது. சில அடிப்படை மாறுதல்களை எடை குறைப்புப் பயிற்சியுடன் சேர்த்துக் கொண்டால், எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இல்லையென்றால், எடை குறைப்புப் பயணம் என்பது மிகக் கடினமாக அமைந்துவிடும்.

கமர்ஷியல் ப்ரேக்கை இப்படி மாற்றுங்கள்:

டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். படம், நாடகம், கிரிக்கெட் என்று எதைப் பார்த்தாலும், அதில் ஒரு கமர்ஷியல் ப்ரேக் விடுவார்கள். அப்போது வெறுமனே உட்கார்ந்து கொண்டு இருப்பதற்கு பதில் எழுந்து நடக்கலாம், குதிக்கலாம். டிவி பார்ப்பதில் எல்லோரும் நிறைய நேரம் செலவிடுகிறோம். அந்த நேரத்தில் சரிபாதியை இப்படி நகர்ந்து கொண்டே இருப்பதில் செலவழித்தால் நிறைய நேரம் நாம் உடற்பயிற்சி செய்ததில் அடங்கும்.

மாடியைப் பயன்படுத்துங்கள்:

பத்தாவது மாடிக்குப் போக வேண்டும் என்றால், லிப்ட்டில் போவதை நியாயப்படுத்தலாம். ஆனால், ஐந்தாவது மாடி என்றால் கண்டிப்பாக நடக்கலாம். இதைப் போன்ற விஷயங்களில் எதைச் செய்ய முடியும். எதைச் செய்ய முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள். செய்ய முடியும் என்று தோன்றுபவற்றைக் கண்டிப்பாக செய்யுங்கள். சில நேரம் உங்கள் எல்லையை கடந்து செல்லுங்கள்.  கண்டிப்பாக உங்கள் ஸ்டாமினா அதிகரிக்கும். உங்கள் உடல் உங்களுக்கு ஒரு கட்டத்தில் நன்றி சொல்லும்.

காபியை இப்படி அருந்தலாமே:

கோல்டு காபி மற்றும் கேரமல் காபிகளை தவிர்த்துவிடுங்கள். உங்கள் தாத்தா பாட்டி குடிப்பது போன்ற காபியை அருந்துங்கள். பால், சிறிதளவு சர்க்கரை மற்றும் காபி. இதைத் தவிர எதையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். காபி ஷாப்புக்குப் போய் வித விதமான கப்பில் நீங்கள் குடிக்கும் காபியில் மிக அதிக கலோரிகள் இருக்கும். எனவே, காபியை பழையபடிக்கே மாற்றுங்கள்.

Categories

Tech |