Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த கேசரி செய்து பாருங்க … எவ்வளவு இருந்தாலும் பத்தாது ….

மில்க் கேசரி

தேவையான  பொருட்கள் :

பால் – 100 மில்லி லிட்டர்

சர்க்கரை – 50 கிராம்

ஏலக்காய் – 3

ரவை – 50 கிராம்

நெய் – தேவைக்கேற்ப

முந்திரி – 10

கிஸ்மிஸ் – 10

பாதாம் பருப்பு – 2

பிஸ்தா – 2

செர்ரி பழம் – 2

குங்குமப்பூ –  சிறிது

மில்க் கேசரிக்கான பட முடிவுகள்

செய்முறை:

ஒரு கடாயில்  சிறிது நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ள  வேண்டும். மற்றொரு கடாயில்  நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . கடாயில் பால் சேர்த்து காய்ச்சி  , வறுத்த ரவை,  ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். ரவை வெந்த பிறகு சர்க்கரை,  நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் , குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பின்  பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து பரிமாறினால் சுவையான மில்க் கேசரி  தயார் !!!

Categories

Tech |