Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்னைக்கு இந்த டீ ட்ரை பண்ணுங்க!!! எல்லோரும் இன்னொரு கப் கேட்பாங்க …

தந்தூரி டீ

தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்

டீத்தூள் –  1 ஸ்பூன்

சர்க்கரை –  2 ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்

சிறிய மண் கலயம் – 1

tandoori teaக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் பாலுடன்  தேவையானஅளவு  தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின்  ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் . இதற்கிடையில்  மண் கலயத்தை நன்றாக  சூடு படுத்தி , பின்  டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும். அவ்வளவுதான் தந்தூரி டீ தயார்!!!

Categories

Tech |