ரோஸ் வாட்டரை பல்வேறு வழிகளில் நமது சருமத்திற்கு பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம்.
ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து கூந்தலில் மசாஜ் செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல் மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் .
ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கும்போது கண்களில் சோர்வு மற்றும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறும் .தினமும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஒரு கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின் முல்தானி மட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் வெள்ளையாகி பிரகாசிக்கும்.
தக்காளி சாற்றில் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும், துடைத்து எடுத்தால் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம்.
முகத்தில் உள்ள கருமை நிறம் மறைய கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து மாஸ்க்காக பயன்படுத்தலாம் .
தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப்பை நீக்க உபயோகிக்கலாம்.ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெயை கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளும் போது உடலுக்கு சிறந்த ஈரப்பதம் கிடைக்கிறது .