Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதி!”… நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!

இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கனடாவைச் சேர்ந்த தீவிரவாதி மீது என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற தீவிரவாதி, பாகிஸ்தானிலிருந்து வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் வாங்கி இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருக்கிறார். இவர் கனடா நாட்டில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வருகிறார்.

ஹர்தீப், பாபர் கல்சா என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். இந்த தீவிரவாத அமைப்பினர், இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தொடர்பில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.விசாரணை செய்தது.

இதனைத்தொடர்ந்து, ஹர்தீப் மீது யு.ஏ.பி.ஏ. உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஹர்தீப் கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு, பல பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் ஹவாலா மூலம் பணப்பரிமாற்றமும் செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |