TSC நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வண்ணம் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. தற்போது டாடா நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பதால் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக விப்ரோ இன்போசிஸ் போன்ற அனைத்து நிறுவனங்களும் work from home முறையை தான் பின்பற்றி வருகிறது.
தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து நிறுவனங்களில் ஊழியர்கள் மீண்டும் பழையபடி அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.அதாவது தற்போது டிசிஎஸ் நிறுவனம் 25*25 மாடல், occasional operating zones (OOZ), மற்றும் ஹாட் டெஸ்க் போன்ற சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் உயர் மட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதத்தில் மேலும் சில பணியாளர்களை அலுவலத்திற்கு அழைத்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிஇருக்கிறது. இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனமும் பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கும் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.