Categories
Uncategorized

“கோவணம் களவாடப்பட்ட கதை தான் திமுக ஆட்சி!”…. நயினார் பேசியது சரி… டிடிவி தினகரன் அதிரடி…!!!

அதிமுக பற்றி பா.ஜ.க வின் எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து சரி தான் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பி,ல் அ.ம.மு.க மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியதாவது, நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எல்லா வார்டுகளிலும்  அமமுக தனித்து போட்டியிட இருக்கிறது.

வேட்பாளர்கள் தேர்வு நடந்துவிட்டது. கடந்த, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். எனினும், தொடர்ந்து போட்டியிடுவோம். அ.தி.மு.க பற்றி நயினார்  நாகேந்திரன் கூறியது சரி. கூறிய வார்த்தைகள் தவறு. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தைரியமின்றி உள்ளார்கள் என்பதை குழந்தையை கேட்டாலும் சொல்லும்.

அதைத் தான் நயினார் நாகேந்திரனும் கூறியிருக்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதிய, “பட்டுவேட்டி கனவு காணும் போது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது” என்ற கவிதை தி.மு.க ஆட்சிக்கு சரியாக பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |