அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் கூறுகையில் , அ.ம.மு.க.வின் செல்வாக்கு போகப்போக தெரியும். தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறுபடும். இந்த தேர்தலின் தோல்வி குறித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.