Categories
அரசியல் மாநில செய்திகள்

”நாங்க யானை பலத்துடன் இருக்கோம்” TTV தினகரன் அதிரடி பேட்டி…!!

அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது தான் அரசியல் இயக்கத்தின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.

Image result for TTV தினகரன் பேட்டி

தொடர்ந்து பேட்டியளித்த அவர் , இந்த தேர்தல் தோல்வி என்பது எங்களை கொஞ்சமும் பாதிக்க வில்லை. எங்களின் நிர்வாகிகளிடம் இதை பார்க்கலாம். யாரோ ஒரு சிலர் சுயநலத்துக்காக சென்றுவிட்டார்களே தவிர  தொண்டர்கள் செல்ல வில்லை. அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது. வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுக்கின்ற போது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பலம் தெரியும் என்று TTV தினகரன் தெரிவித்தார்.

Categories

Tech |