Categories
மாநில செய்திகள்

“இந்தி திணிப்பு மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்”…. அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Image result for amit shah

 

அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for amitshah, ttv dinakaran

 

இந்நிலையில் அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு முக ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில்,தமிழர்கள்#StopHindiImposition , #StopHindiImperialism  #தமிழ்வாழ்க  ஹேஸ்டேக்கை உலக அளவில் ட்ரெண்டாக்கி எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் அமித்ஷாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்  “ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல. இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும். கடந்தகால வரலாறு சொல்லும் பாடத்தை புரிந்துகொண்டு இக்கருத்தை அமித்ஷா திரும்பப்பெற வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |