சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான், இந்த கைதுக்கான பின்னணி எனச் சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.V.அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 12, 2020
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட திரு.அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 12, 2020