பணத்தை நம்பித்தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தேர்தல் பரப்புரை சென்ற போது ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின்படி சோதனை நடத்தினால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு குறிவைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது என்கிற எண்ணம் ஏற்படுகின்றது. தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். RK நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போதே இவர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து தோல்வி அடைந்தனர். கேட்டால் டோக்கன் கொடுக்கிறோம் என்று நம்மை பற்றி பொய்யான தகவலை சொல்கிறார்கள். உண்மையிலே R.K நகர் தேர்தலின் போது பணம் கொடுத்தவர்கள் ஆளுங்கட்சிதான் என்று அனைவருக்கும் தெரியும். 20 தொகுதிகளிலும் பணத்தை நம்பித்தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது. 1 ஓட்டுக்கு ரூ.500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்று TTV தினகரன் குற்றம் சாட்டினார்.