Categories
அரசியல் மாநில செய்திகள்

இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகம் இது “இழிவுபடுத்தி பேசுவது பதவிக்கு அழகல்ல” டிடிவி தினகரன் பாய்ச்சல்…!!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணம், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட முக்கிய காரணமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Related image

கிரண்பேடியின் இந்த கருத்துக்கு  தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பு மற்றும் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு;ஆதிக்கத்தின் அடையாளம். கிரண்பேடி தமது விமர்சனத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

Related image

இந்நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.

Image result for டிடிவி தினகரன்

அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடி‘நிர்வாக திறனற்ற’ இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும். அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது.

Categories

Tech |