ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை. நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் , ONGC திட்டத்தை விளைநிலங்களில் , மக்கள் வசிக்கும் பகுதிகளில் , டெல்டா பகுதியில் , காவிரி பாசன பகுதிகளில் என மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் எடுப்பதை கைவிட வேண்டும்.
கடல்களில் இந்த ஹைட்ரோகார்பன் மீத்தேனை எடுக்கலாம் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும் நிலத்தை விட மூன்று மடங்கு கிடைக்கும் என்று அறிக்கை கொடுத்திருந்தாங்க.மக்களை பாதிக்கிற விவசாயிகளை பாதிக்கிற திட்டத்தை மத்திய அரசாங்கம் தயவுசெய்து கைவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதை அரசியல் கட்சி சார்ந்தவனாக சொல்லல. இந்த மண்ணில் பிறந்த சோழமண்டலத்தில் பிறந்து வளர்ந்தவனாக சொல்றேன் என்று TTV தினகரன் தெரிவித்தார்.