TTV தினகரன் அதிமுகவில் இணைவார் அதற்காக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு மிப்பெரிய கட்சியாக 1.50 கோடி வாக்காளர்களை கொண்ட கட்சியாக இருந்து வந்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக_வின் வளர்ச்சி அனைவராலும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் முற்றிலும் மாறி அதன் வீழ்ச்சி தலைகீழாக மாறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள கூடாது என்று OPS தர்மயுத்தம் தொடங்கியது இன்று அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது . இதையடுத்து அதிமுக_வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட TTV.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்து அதன் துணை பொது செயலாளராக இருந்து வருகின்றார். அதோடு அதிமுகவின் இருந்து பலர் அமமுக_விற்கும் , அமமுக_வில் இருந்து திமுக_விற்கும் , அதிமுக மற்றும் அமமுக_வினர் திமுக_வில் இணைந்து வருகின்றனர் .
சமீபத்தில் அதிமுக_வில் இருந்த ராஜகண்ணப்பன் மற்றும் அமமுக இருந்த செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.இவர்கள் இருவரும் அதிமுக_வில் அமைச்சராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் இதை TTV தினகரன் மறுத்துள்ளார்.