Categories
அரசியல் மாநில செய்திகள்

49 பேர் மீது தேச துரோக வழக்கு ”அதிர்ச்சி அளிக்கிறது” TTV தினகரன் ட்வீட்

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி  ட்வீட் செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 பிரபலங்கள் எழுதி இருந்தனர்.

 

அதில் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் , ஜெய் ஸ்ரீ ராம் , கும்பல் தாக்குதல் என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குநர் மணிரத்தினம் உள்பட கடிதம் எழுதிய 49 பேர் மீதும்  பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்க்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV.தினகரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் , சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட மூத்த திரைக் கலைஞர்கள் 49 பேர் மீது பீகாரில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்று பதிவிட்டிருந்தார்.

 

Categories

Tech |