அதிமுக_வில் இணைவது தொடர்பாக மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து TTV.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அமமுக_த்தில் பல்வேறு சலசலப்பை உண்டாக்கியது .
இந்நிலையில் மதுரை ஆதினம் கூறிய இந்த கருத்தை அமமுக_வின் துணை பொதுசெயலாளர் TTV.தினகரன் முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து TTV. தினகரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 21, 2019