Categories
அரசியல்

” TTV.தினகரனின் முகம் தான் எங்கள் சின்னம் ” தென்காசி வேட்பாளர் பேட்டி..!!

TTV.தினகரனின் முகம் தான் எங்களின் சின்னம் என்று தென்காசி அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்தாயி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். மக்கள் நீதி மையம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். மேலும் அமமுக தங்களுக்கு R.K நகர் தேர்தலில் போட்டியிட்ட குக்கர் சின்னம் ஒதுக்க கோரினார் ஆனால் தேர்தல் ஆணையம் குக்கர் சினத்தை ஒதுக்க மறுத்து விட்டது.

ttv

குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அமமுக_வினர் சின்னத்திற்காக காத்திருக்கின்றனர். இதையடுத்து அமமுக சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொன்னுத்தாயி எங்களுக்கு சின்னம் என்பதே TTV.தினகரனின் முகம் தான் எங்களின் சின்னம் என்று சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Categories

Tech |