Categories
விளையாட்டு

துடுப்புப் படகு போட்டியில் இந்திய ஜோடி…! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது …!!!

துடுப்புப் படகு தகுதி சுற்று போட்டியில் இந்திய ஜோடி , டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று டோக்கியோவில், துடுப்பு படகு தகுதிச்சுற்று போட்டியானது நடைபெற்றது. இதில் ஆண்கள்  ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவில் இந்திய வீரர்களான அர்ஜூன் லால் ஜாட்- அர்விந்த் சிங் ஜோடி பங்கு பெற்று, 2வது இடத்தைப் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறமுடியும் . இதில் இந்திய ஜோடி 2வது இடத்தை பிடித்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் மற்றொரு ‘லைட் வெயிட் சிங்கிள் ஸ்கல்ஸ்’ போட்டி பிரிவில், இந்திய வீரரான ஜாகர் கான்   4 வது இடத்தை பெற்றதால், ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார். வெற்றிக்குப்பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர், அர்ஜுன் லால்  கூறும்போது,  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  ஒலிம்பிக் போட்டி கட்டாயம் நடைபெற விரும்புகிறேன் என்றும் ,இல்லை என்றால் எங்களுடைய 4 ஆண்டு கால  உழைப்பு அனைத்தும் வீணாகி விடும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |