Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை…. சென்னை ஐஐடி நிறுவனத்தின் புதிய திட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!!

சென்னை ஐஐடி நிறுவனம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஐஐடி நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக என்பிடிஇஎல் என்ற ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 18 மாநிலங்களில் உள்ள 160 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகையானது வழங்கப்படும். இந்த உதவி தொகை 10,000 மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் ஐஐடி சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக நடத்தப்படும் ஆன்லைன் வீடியோவை உலக அளவில் 140 கோடி பேர் பார்த்துள்ளனர். இதில் சேர்வதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் குடும்ப சூழ்நிலையை ஆய்வு செய்து பரிந்துரை செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு இது தொடர்பாக ஐஐடி ஆன்லைன் வழி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆன்ட்ரூ தங்கராஜ் கூறியதாவது, ஆன்லைன் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகையானது வழங்கப்படுகிறது. மேலும் உலக அளவில் 5000 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய கற்றல் திறனை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார்.

Categories

Tech |