Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டும் டும் டும்…. 60 அடி ஆழ ஆழ்கடலுக்குள்…. நீந்திக்கிட்டே கல்யாணம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

புதுமண தம்பதிகள் 60 அடி ஆழம் ஆழ்கடலுக்குள் சென்று திருமணம் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை வசிப்பவர் சின்னதுரை(29). கோவை யை சேர்ந்த ஸ்வேதா(26). இவர்கள் இருவரும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக சின்னத்துரை ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் என்பதால் தன்னுடைய திருமணத்தை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இதை அடுத்து ஸ்வேதாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவிற்கு உறவினர்கள் யாரும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோர்களை சம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து அரவிந்த் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் என்பவரின் உதவியுடன் காலை 6:30 மணிக்கு மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடையில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு நீலாங்கரை கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஆழ்கடலுக்குள் 60 அடி ஆழத்திற்கு சென்று தாலி கட்டி அசத்தியுள்ளனர்.

நாற்பது நிமிடங்கள் இந்த திருமணம் நடந்துள்ளது. கடலுக்குள் மீன் ஆமை களுக்கு நடுவே நடந்த இந்த திருமணம் வித்யாசமான அனுபவமாக இருந்தது என்று மணமகள் சுவேதா கூறியுள்ளார். கடலை பாதுக்காக்க அனைவரும் முன்வர வேண்டும் அன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்வாறு திருமணம் செய்ததாக கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்து முறைப்படி திருமணம் நடந்தது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |