Categories
தேசிய செய்திகள்

பயணிகளிடம் கொரோனா சோதனை… ஏனோ தானமாக செயல்பட்ட அதிகாரி… வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே ஏனோ தானமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனை செய்து அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தும்கூர் இரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு பயணிகளாக வரிசையில் வந்தனர். ஆனால் அவர், பயணிகளின் நேருக்குநேர் நின்று வெப்பநிலை மானியை வைத்து சோதனை செய்யாமல் சேர் போட்டு ஹாயாக உட்கார்ந்தும், செல்போனில் பேசிக்கொண்டே, ஒவொருவரையும் பார்த்து வெப்பமானியை சாதாரணமாக நீட்டி ஏனோதானமாக போக்குக்காட்டி அனுப்பியுள்ளார்.

Image result for Tumkur Railway station coronavirus checking

செல்போனில் பேசிக்கொண்டு வெப்ப அளவை பார்க்காத அவர், பயணிகளின் முகத்தை கூட பார்க்காமலேயே அனுப்பியுள்ளார். அதிகாரியின் இந்த அசட்டைத்தனமான இந்த செயலை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கொரோனாவை விட தீயாக பரவியதையடுத்து நரசிம்மமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |