எல்லை பாதுகாப்பு படையினர் 15௦ மீட்டர் மற்றும் 3௦ அடி ஆழமுள்ள ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள கத்துவா நகரில் சர்வதேச எல்லைப் பகுதியில் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட ஒரு சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதே பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெக்ஸாகாப்டர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டது. அதில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் கும்பலை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இந்த சுரங்கப்பாதை ஆனது கடந்த 6 மாதங்களில் ஹிராநகர், சம்பா மற்றும் கத்துவா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதையாக உள்ளது. மேலும் இது ஜம்மு நகரில் கண்டுபிடிக்கப்பட்ட பத்தாவது சுரங்கப்பாதை என்று எல்லை பாதுகாப்பு படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.