துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை.
இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு மாகாணத்திலும் வான்வெளி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. துருக்கி, 20-க்கும் அதிகமான ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக சிரியா நாட்டின் மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.