Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… சூப்பர் தகவல்…. பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு… துருக்கி வெளியிட்ட நல்ல தகவல்…!!!

துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது.

அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விவசாயிகள் குறிப்பிட்ட சில காலத்திற்கு நாட்டில் பணி அனுமதியின்றி வேலை செய்ய முடியும், கால்நடை வளர்ப்பு மற்றும் பருவ கால விவசாயத்தில் பணி மேற்கொள்ளும் பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை பணி அனுமதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அறிவியல் ஆய்விற்காக பொது நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள் அல்லது தங்களின் அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்த விரும்பும் மக்களுக்கு இரண்டு வருடம் விலக்கு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் பிற நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்களின் வேலை ஒப்பந்தங்கள் முடிவடையும் வரைக்கும் தங்கள் தொழில்களில் தொடர்ந்து ஈடுபட முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |