Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றிய நாடு…. சர்வதேச சட்டங்களை மீறி நடவடிக்கை…!!!

துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் இந்த நடவடிக்கை தீவிரமடைந்திருப்பதாக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துருக்கி நாட்டிலிருந்து, நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சில பேர், துருக்கி காவல்துறையினர் எங்களை அவர்களால் முடிந்த அளவிற்கு தாக்கினார்கள் என்று  தெரிவித்துள்ளனர். நாங்கள் துருக்கி நாட்டிற்கு பிழைக்கத் தான் சென்றோம். எங்களை நாடு கடத்துவதை விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை ஈரானுக்கு அனுப்பியது சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. துருக்கி, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை வறுபுறுத்தி வெளியேற்றுவது சர்வதேச அகதிகள் சட்டங்கள், மரபுகளை  மீறும் நடவடிக்கை என்று சர்வதேச உறவு நிபுணரான நசீர் அஹமட் தரேக்கி தெரிவித்திருக்கிறார். இது அந்த அகதிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |