துருக்கி-ஈரான் எல்லைப்பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரான்-துருக்கி எல்லை பகுதிகள் கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கும் துருக்கிக்கும் இடையிலான காபிகோ-ராஸி எல்லை பகுதி கடந்த 14 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான சாலை வழி போக்குவரத்து அந்த எல்லையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் அடங்கிய குழு, 41 ஈரான் பெண் தொழிலதிபர்கள் ஆகியோருடன் துருக்கியில் உள்ள வேன் நகருக்கு அந்த எல்லை வழியாக சென்றுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நகரில் உள்ள ஹோட்டலில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் பிரபல செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் ஈரானில் சுமார் 30,20,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 81,911 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.