துருக்கி நாட்டின் தென் கிழக்கு மாகாணத்தில் Sanliurfa ல் 3 மீட்டர் உயரமுள்ள மர்மப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் பகுதியான Gobeklitepeல் இந்த பகுதியில் உலோகத்தால் ஆன ஒரு பொருள் நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அங்கு அதிக அளவில் கூடியதால் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தென்பட்ட இந்த மர்மபொருள் பின்பு பல்வேறு இடங்களில் திடீர் என்று தோன்றி மறைந்தது. தற்போது உலோகப் பொருளில் சந்திரனை காண வேண்டுமானால் வானத்தைப் பாருங்கள் என்ற சொற்றொடர் எழுதப்பட்டுள்ளது.