ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் துருக்கி அதிபர் சீண்டும் விதமாக பேசியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 193 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
அதில் ” காஷ்மீர் எல்லையில் 74 வருடங்களாக தொடர்ந்து வரும் எல்லை பிரச்சினையில் ஐ.நா.சபை தலையிட்டு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதில் துருக்கி அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா தக்க பதிலடியையும் கொடுத்துள்ளது.
அதில் “இந்த கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் மற்ற நாடுகளின் இறையாண்மையையும் போற்ற கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக தனது சொந்தக் கருத்துக்கள் தொடர்பாக துருக்கி இன்னும் ஆழமாக ஆலோசனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவிடம் மோதிய அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.