துர்க்மெனிஸ்தான் அரசு, “நரகத்தின் வாசல்” எனப்படும் டார்வெசாவில் இருக்கும் எரிவாயு நிலப்பரப்பை அடைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருக்கும் அஹல் மாகாணத்தின் டார்வெசா பகுதி நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டிருக்கிறது. இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்க முயற்சி நடைபெற்ற சமயத்தில் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் வட்ட வடிவத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அங்கு மீத்தேன் வாயு இருந்தது கண்டறியப்பட்டது. மீத்தேன் வாயு பரவாமல் இருக்க, கடந்த 1971- ஆம் வருடத்தில் அந்த பள்ளத்தில் தீ வைத்தனர். அப்போதிலிருந்து, தொடர்ந்து பள்ளத்தில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தான் திட்டமிட்டு அங்கு தீ வைத்ததாக கூறப்பட்டது.
அப்பள்ளத்தில் இருக்கும் எரிவாயுவால் பல வருடங்களாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. எனவே, அப்பளத்தை ‘நரகத்தின் வாசல்’ என்று அழைத்தனர். அந்தப் பள்ளம் தற்போது சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது. உலகில் உள்ள சுற்றுலா பயணிகள் இந்த பள்ளத்தை பார்க்க வருகிறார்கள்.
இந்நிலையில், துர்க்மெனிஸ்தான் அரசு, நரகத்தின் வாசல் எனப்படும் அந்த பள்ளத்தை அடைக்க தீர்மானித்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதியில் இருக்கும் இயற்கை எரிவாயு வீணாகிக் கொண்டிருப்பதை தடுப்பதற்காகவும் அதனை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் அந்த நரக வாசலை அடைக்க இருப்பதாக அந்நாட்டின் அதிபர் குர்மென்குலி பெர்முர்மெடெவ் கூறியிருக்கிறார்.