Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டன் கணக்கில் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி செயல்….!!

லீகடத்தி செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளோடு சேர்த்து படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையிலிருந்து கடல் அட்டை, வெங்காய விதை மற்றும் மஞ்சள் போன்றவை சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கியூ பிரிவு காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் பல்வேறு உளவு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியிலிருந்து மஞ்சள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரி விஜயஅனிதா தலைமையில் வில்லியம் பெஞ்சமின், ஜீவமணி தர்மராஜ் மற்றும் வேல்ராஜ் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் காவல்துறையினர் சந்தேகப்படும்படி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் சாக்குப்பைகள் அடுக்கி வைக்கபட்டிருந்ததால் அதனை சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில்  75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 டன் மஞ்சள் படகில் இருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தல் தொடர்பாக அப்சல் முகமது என்பவரை கைது செய்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்சல் மஞ்சளை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மற்றும்  படகு போன்றவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |