Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட்டில் ஒரே நாளில் 44 வியாபாரிகளுக்கு கொரோனா!

விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட்டில் 44 வியாபாரிகளுக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதியானது.  அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று இரவு பரிசோதனை முடிவு வெளிவந்தது  அதில் 24 பேருக்கு தொற்று உறுதி ஆன நிலையில் இன்று காலை மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் 104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 3 நாட்கள் விளாத்திகுளம்  முழுவதும் அனைத்து கடைகளையும் மூட  வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் காய்கறி மார்க்கெட்டை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. கொரோனா தொற்றின்  பாதிப்பு குறையும் வரை மூட பேரூராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அது மட்டுமின்றி, விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 5 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு உள்ள அத்தியாவசிய பொருட்கள் கடை தவிர்த்து மீதமுள்ள அனைத்து கடைகளையும் மூட பேரூராட்சி நிர்வாகம் அதிரடி  உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |